3.12.10

உருமாற்றம்


இன்றும் நினைவில் நிற்கும் சில மொழிபெயர்ப்பு நாவல்கள் பற்றி என் நினைவு ஓடுகிறது.

இந்த நாவல்கள் என்னில் என்ன மாறுதலை ஏற்படுத்தியிருக்கின்றன என்றெண்ணும் போது அடைபட்டிருந்த இருண்ட மாளிகையின் ஒவ்வொரு சாளரமாகத் திறக்கும் காட்சி கண்முன் தோன்றுகிறது.

மற்ற மொழியில் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறியவும் இது அளவுகோலாக இருக்கிறது.

குறிப்பாக க.நா.சு. மொழிபெயர்ப்புக்கீடாக இன்னொரு மொழிபெயர்ப்பைச் சொல்லமுடியுமா தெரியவில்லை.

அத்தனையும் அமிர்தம். அவர் மொழிபெயர்த்த மதகுரு, பசி மற்றும் நிலவளம் இன்றைக்கும் ஆனந்தச்சுரங்கம்.

ஒவ்வொரு நாவலாக அவற்றின் கதைச் சுருக்கம் சொல்லலாம் என்று முதலில் தோன்றியது.

பிறகு படிக்கும் ஆர்வத்தை அது தூண்டாது மாறாக தாண்டிச்செல்லும் சௌகர்யத்தை உண்டாக்கிவிடும் என்று பட்டதால் அந்த நினைப்பைக் கைவிட்டுவிட்டேன்.

வாசிக்கும் வெறிபிடித்தவர்கள் நிச்சயம் தவற விடக்கூடாத பொக்கிஷங்கள் இவை.

ஒவ்வொன்றையும் குறைந்தது எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று சொல்லத்தெரியவில்லை.

அவை உங்களின் குணம் மேன்மையுறவும் உங்களில் கடவுள்த்தன்மை குடிபுகவும் உதவுமென்று சத்தியம் பண்ணுவேன்.

அந்தப் பட்டியல்:

கறையான்-சிர்ஷேந்து முகோபாத்யாய்-வங்காளம்
வெண்ணிற இரவுகள்-தாஸ்தயேவ்ஸ்கி-ருஷ்யா
குற்றமும் தண்டனையும்-தாஸ்தயேவ்ஸ்கி-ருஷ்யா
என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது-வைக்கம் பஷீர்-மலையாளம்
தந்தையும் தனயர்களும்-இவான் துர்கேனிவ்-ருஷ்யா
நிலவளம்-நட் ஹாம்சன் - நார்வீஜியன்
பசி-நட் ஹாம்ஸன் - நார்வீஜியன்
சித்தார்த்தா-ஹெர்மென் ஹெஸ்ஸே-ஜெர்மன்
நீலகண்டப் பறவையைத் தேடி-அதின் பந்தோபாத்யாய் - வங்காளம்
இலட்சிய இந்து ஹோட்டல்-விபூதிபூஷண் பந்தோபாத்யாய்-வங்காளம்
சம்ஸ்காரா-யு.ஆர்.அனந்தமூர்த்தி-கன்னடம்
செம்மீன் -தகழி சிவசங்கரப்பிள்ளை-மலையாளம்
ரஸவாதி-பாவ்லோ கோய்லோ- பிரேசில்
தாய்-மாக்ஸிம் கார்க்கி-ருஷ்யா
கினு கோனார் சந்து-சந்தோஷ்குமார் கோஷ்-வங்காளம்
மதகுரு-ஸெல்மா லாகர்லேவ்-ஸ்வீடிஷ்
முதியவனும் கடலும்-ஹெமிங்வே- அமெரிக்கா
வங்காள இரவுகள்-மிர்ச்சா எலியாதே-ருமேனியா. (இது நான் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பது-மூலம் ஆங்கிலத்தில் கிடைத்தால் படியுங்கள்.புதுப் புத்தகம் கிடைக்காது)

3 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

//மற்ற மொழியில் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறியவும் இது அளவுகோலாக இருக்கிறது//

உண்மைதான். மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய பதிவுக்கு தலைப்பு புதுமை அழகு. க. நா. சு. பற்றி குறிப்பிட்டது தேடிப் படிக்கும் ஆவலைக் கிளர்த்தியது. மதகுரு, தாய்(வெகு ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன்), செம்மீன், சம்ஸ்காரம், நீலகண்டப் பறவையைத் தேடி. குற்றமும் தண்டனையும், வெண்ணிற இரவுகள் ஆகியவை வீட்டு நூலக சேகரிப்பில் இருந்தும் அதிக அக்கறையின்றி இருந்துவிட்டேன் இதுகாலமும்.
பாரதிக்குமார் தன் பேராவல் விழைவில் மேலும் நூற்றுக் கணக்கான மொழிபெயர்ப்பு நாவல்கள் வாங்கிக் குவித்து, படித்துமிருக்கிறார். நிறைய தவற விட்டிருக்கிறேன் எனப் புரிய வைத்தமைக்கு நன்றி ஜி!

santhanakrishnan சொன்னது…

தங்களின் ருசி அலாதியானது
சுந்தர்ஜி.
நீலகண்டப் பறவையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கிடைக்க வில்லை.
மதகுரு,ரஸவாதி,அமெரிக்க வங்காள இரவுகள்,பசி படிக்கவில்லை.
கறையான் மறக்க இயலவில்லை.
அன்னாகரீனினா,அந்நியன்,
காஃப்காவின் ஒரு நாவல்,Farewell to
arm. ஸக்காரியாவின் கதைகள் ...இது முடிவில்லாத பட்டியல்.

நிரம்ப சந்தோஷம் சுந்தர்.

சைக்கிள் சொன்னது…

நல்ல பதிவு.சிலவற்றைப் படித்திருக்கிறேன். 'நீலகண்டப் பறவை' பதிப்பில் இல்லை என்பதால் தேடிக் கொண்டே இருக்கிறேன். அடுத்த முறை புத்தகத் தேர்வுக்கு உங்கள் பட்டியல் உதவும். நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...