ஒரு காகிதத்தின் மையத்தில்
மானை வரைந்து-
தோன்றிய இடங்களிலெல்லாம்
மேகங்களையும்
புல்வெளிகளையும்
வரைந்தது குழந்தை.
பேசியபடியே கடந்துபோன
அப்பா அம்மாவால்
இம்மியும் கலையவில்லை
-புதரின் பின்னே
மானை வேட்டையாடக் காத்திருந்த-
புலியின் உறக்கம்.
சப்தமேதும் எழுப்பாமல்
மான் புற்களை
வேட்டையாடி முடித்த பின்
இடி மின்னலோடு
கடும்மழை பெய்யத்
தொடங்கியிருந்தது
குழந்தையின்
தூரிகையிலிருந்து.
11 கருத்துகள்:
முகப்பில் இருக்கும் மல்லிகையின் சுகந்தம் கவிதையிலும் மொட்டவிழ்கிறது. பின் மழை எழுப்பும் மண் வாசனையோடு வாசிப்பு முற்றுப் பெறவும், துவங்கவும் செய்கிறது.
படம் ஜோர்...
கவிதை அதை விட ஜோர்!!
குழந்தைகள் உலகத்தில் நீங்களும் நுழைந்து குழந்தையாகவேஎண்ணுங்கள். அருமையான கற்பனை ஊற்றுகள் பிரவாகிக்கும். வலைப்பூ முகப்பில் இருக்கும் பூ, அதிகாலையில் மட்டும் விரியும் பிரம்ம கமலம் போல் தோன்றுகிறது.சரியா.? நாளுக்குநாள் அசத்துகிறீர்கள். சுந்தர்ஜி.
காகிதத்தில் தொடங்கி
கடும் மழை தொடங்கியபோது
முடியுற்ற கவிதை
குழந்தை மட்டுமல்ல
உங்களின் தூரிகையிலிருந்தும்
ஓவியமாய் கவிதை
வண்ணமாய்
வசீகரிக்கின்றது
ச்.ச்.ச்.... சூப்பெர்ப்.
குழந்தையின் தூரிகையிலிருந்து விழுந்த மழை.. ;-))
//இடி மின்னலோடு
கடும்மழை பெய்யத்
தொடங்கியிருந்தது
குழந்தையின்
தூரிகையிலிருந்து.//
குழந்தைகள் போலவே மிகவும் அழகான கவிதை. பாராட்டுக்கள், சார்.
குழந்தையின் தூரிகையிலாவது புலியிடமிருந்து மான் தப்பிக்கொள்ளட்டும் !
குட்
நல்ல கவிதை. குழந்தைகளின் ஓவியங்கள் அவர்களின் எல்லையில்லா கற்பனையைக் காட்டுகிறது என்றும் ரசிக்கத் தக்கது....
really fantastic:)
மான் புற்களைத்
தின்று முடித்த பின்
இடி மின்னலோடு
கடும்மழை பெய்யத்
தொடங்கியிருந்தது
குழந்தையின்
தூரிகையிலிருந்து.//
இந்த மனம் எப்பருவத்துமிருந்தால்... ஹேமா பெருமூச்செரிய வேண்டியிருக்காது... ஹ்ம்ம்ம்ம்!
கருத்துரையிடுக