1.
எல்லாம்
அறிந்தவனுக்கும்
எதுவுமே
அறியாதவனுக்கும்
நடுவில்
சுமக்கப்படக்
காத்திருக்கிறது
ஆறாம் அறிவின்
பாரச் சிலுவை.
2.
எல்லாம்
தெரியுமென்கிறான்
எதுவுமே தெரியாதவன்.
எதுவுமே
தெரியாதென்கிறான்
எல்லாம் தெரிந்தவன்.
எல்லாம்
தெரிவது சாபமெனில்
எதுவும்
தெரியாதிருப்பது
வரமெனக் கொள்க.
3.
கட்டப்படாத
நாய்க்கு
உறங்கத்தெரியாது.
கட்டப்படாத மாடு
வீடு அடையாது.
கட்டப்படாத கப்பல்
கரை சேராது.
கட்டப்படாத
பூக்கள் மாலையாகாது.
கட்டப்படாத கற்கள்
மனையாகாது.
கட்டப்படாத சொற்கள்
கவிதையாகாது.
கட்டப்படாதவை
கட்டப்படட்டும்.
கட்ட இயலாதவை
பட்டு உணரட்டும்.
14 கருத்துகள்:
ஆஹா, மூன்றுமே படு ஜோர், சார்.
’பாரச்சிலுவை’ தான் சற்றே புரியவில்லை.
//எதுவும் தெரியாதிருப்பது வரமெனக் கொள்க.//
ஓ. கே., எனக்கு நிறைய வரம் உள்ளதெனக் கண்டு கொண்டு விட்டேன், சார்.
//கட்டப்படாத
பூக்கள் மாலையாகாது.
கட்டப்படாத கற்கள்
மனையாகாது.
கட்டப்படாத சொற்கள்
கவிதையாகாது.//
ஆஹா, சூப்பர் ஜி!
அருமை
கேட்டு படித்து கட்டப்படும் கவிதைகளை விட
பட்டு உணர்ந்து கட்டப்படும் கவிதைகள்
எளிதாக காலம் கடத்தல் போல
தங்கள் கவிதையும்...
எல்லாம் அறிந்தவனும் இல்லை. ஏதும் அறியாதவனும் இல்லை. ஆக,அனைவரும் ஆறாம் அறிவின் பாரச் சுமை சுமப்பவரே. சாபமும் வரமும் பெற்றவரே அனைவரும். இயலாதவை இருப்பதாகத் தோன்றவில்லை. சிந்திக்க வைக்கும் கவிதை. சபாஷ். சுந்தர்ஜி.
எல்லாம்
தெரிவது சாபமெனில்
எதுவும்
தெரியாதிருப்பது
வரமெனக் கொள்க.
கட்ட இயலாதவை
பட்டு உணரட்டும்.
முதலில் இதமாய் சொன்ன கவி அடுத்ததில் சற்றே கவிச் சீற்றம் காட்டியதும் அருமை.
ம்...கட்டப்படாத எவையும் பட்டுத்தான் உணரும் கட்டாக்காலிகள்.கொஞ்சமாவது வெளி உலகம் தெரிந்திருப்பது சாபம்தான் சுந்தர்ஜி.
அனுபவங்களுக்கு வார்த்தைகள் கோர்ப்பது உங்களின் சிறப்பு !
//எல்லாம்
தெரிவது சாபமெனில்
எதுவும்
தெரியாதிருப்பது
வரமெனக் கொள்க.
//
உண்மை. முதல் கவி புரியவில்லை
இந்த கவிதை எனக்கு புரிந்த வரையில்
எல்லாம் அறிந்தவன்
என்பவனின்
கர்வம்
சுமக்கவும்
எதுவுமே அறியாதவன்
என்பவனின்
கழிவிரக்கம்
சுமக்கவும்
காத்திருக்கிறது
ஆறாம் அறிவின்
பாரச் சிலுவை.
தங்களுடன் பேசியது மகிழ்ச்சி தந்தது ஜி! மாலையே உங்கள் நண்பரும் பேசினார். எந்த அளவு என்னுடன் பேசியது அவருக்கு உதவியிருக்கும் எனத் தெரியவில்லை. இருப்பினும் மகிழ்ச்சி.
அனுபவம் என்கிற மையில் எழுதப் படும் கவிதைக்கு எப்போதுமே ஏற்றம் ஜாஸ்தி தான்!
அண்ணா! கடைசி ஒரு ஜெம். ;-))
\\கட்ட இயலாதவை
பட்டு உணரட்டும்.//
நெத்தியடி
//கட்டப்படாத சொற்கள்
கவிதையாகாது.''
சரியாத்தான் படுதுங்க!
nice.........
/கட்டப்படாத கப்பல்
கரை சேராது./
கட்டப்படாத கப்பல்
கடலுக்குப் போனால் தானே
கரை சேருமா? என்ற கவலை!
/கட்டப்படாத
பூக்கள் மாலையாகாது/
கட்டிய மலர்கள் தோல்களுக்கு
கட்டாதவை அர்ச்சனைக்காகலாம்!
கட்டுதல் ஒரு கலையெனில்,
கட்டின்றி இருத்தல் ஒரு தவம்.
கட்டப்பட்டவை சுந்தர்ஜியின் கவிதைக்கொப்பாகட்டும்,
கட்டப்படாதவை 'ஓம்' என்றோ, 'உம்'என்றோ இருக்கட்டும்.
கருத்துரையிடுக