21.6.11

மாறுவேடம்
























1
சற்றுமுன்
வீட்டிலிருந்த அப்பாவை
வந்தவரிடம்
”அவர் வீட்டில் இல்லையே?”
என்றாள் அம்மா.

கொஞ்சநேரம் கழித்துக்
குழந்தை மாடிப்படியடியில்
ஒளிந்துகொண்டு கத்தியது
அம்மா நான் இங்க இல்ல.

2
”ஏன் சும்மா அலட்டிக்கிற?
போனாப்போகுது.
அடுத்த தடவை பாத்துக்கலாம்”
என்று அம்மாவிடம்
சொன்ன அப்பா
என்னிடம்
”எத்தனை தடவை
அடுத்த தடவைன்னு
சால்ஜாப்பு சொல்லுவியோ
தெரியலை” என்றார்.

15 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அற்புதமான கருக்களை கொண்ட
அழகிய கவிதைகள்

G.M Balasubramaniam சொன்னது…

குழந்தைகள் நம்மிடமிருந்து கற்கின்றன. நல்லதோ கெட்டதோ அவர்கள் அறியாமலேயே கற்கிறார்கள்.குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு அதிக கவனம் தேவை. பதிவின் படிப்பினைகளும் சென்றடைய வேண்டும்.

க.பாலாசி சொன்னது…

அருமைங்க ஜி...

நாம சொல்லிக்கொடுக்கறதுதானே எல்லாமும்.. குழந்தையாக இருக்கும்போது கையை எப்படி மூடுகிறோமோ அதன்படியே படிகிறது ரேகைகளும்.

ரிஷபன் சொன்னது…

இயல்பு நிகழ்ச்சிகளில் இயல்பாய் கவித்துவம் மிளிர்கிறது.

பத்மா சொன்னது…

nitharsanam

எல் கே சொன்னது…

:)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

குழந்தைகளின் பார்வை, சிந்தனை, செயல் எல்லாமே மிகத் தெளிவானது. நாளடைவில் பிறர் செயல்களையும், சொற்களையும் கண்டு/கேட்டு குழம்பிய குட்டையாக மாறிவிடுகின்றன.

குழந்தை போன்றே அழகான நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

காமராஜ் சொன்னது…

பலநேரங்களில் அவர்கள் முன்நாம் குற்றவாளியாய் நிற்கவேண்டியதிருக்கிறது.
சராசரி மனிதன் அதைப்பெருமையாகக்கொள்கிறான். கவிஞன் மனசாட்சியை உலுக்கிவிடுகிறான்.

ஜீ..
சல்யூட்.
கவி காளமேகத்துக்கும் சேர்த்து.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தைகளின் பார்வையில் எல்லாமே நல்லது தான்…

இரண்டுமே நல்ல கவிதைகள். முதல் கவிதை சிரிப்பை வரவழைத்தது. இரண்டாவது குழந்தைகளைப் புரிந்து கொள்ளாத பெரியவர்களாக இருக்கிறோமே என்று வியப்பைத் தந்தது…

கிருஷ்ணப்ரியா சொன்னது…

கவிதைகள் மட்டுமல்ல, அந்த குழந்தையும் தான் கொள்ளை அழகு....

நிலாமகள் சொன்னது…

குழ‌ந்தை மொழியில் குழ‌ந்தையின் உள‌விய‌ல்!

raji சொன்னது…

உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் கவிதை
பகிர்விற்கு நன்றி

ஹேமா சொன்னது…

குழந்தை மனசு விஷயங்களை ஆழமாகப் பதித்துக்கொள்கிறது !

Ramani சொன்னது…

குழந்தைகள் நீ சொல்வதைச் செய்வதில்லை
நீ செய்வதைச் செய்கிறார்கள் என எங்கோ
படித்த நினைவு
தங்கள் பதிவு அதனை மிக சிறப்பாக
மனதில் பதிவு செய்து போகிறது
சூப்பர் பதிவு

மிருணா சொன்னது…

அந்த ஓவியத்தில் உள்ள குழந்தை அழகிய கவிதை போல இருக்கிறது. அந்த முதல் கவிதையில் உள்ள வரிகள் ஒரு குழந்தையின் அழகோவியம் போல இருக்கிறது. இரண்டாவது கவிதையில் எல்லோருமே வளர்ந்தவர்களாகத் தென்படுகிறார்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...