24.6.11

இருப்புப்பாதையின் ஓவியம்




















சரசரக்கும்
சரளைக்கற்களை
ஊடுருவும்
இருப்புப்பாதைகளும்-

தலைமுடிக்குள்
ஒளிந்துகொள்ளும்
கரித்துண்டுகளும்-

அதிரும்
மின்கம்பிகளுடன்
இருளைக் காட்டும்
பாதையோர
மின்மினிகளும்-

பார்வையற்ற யாசகனின்
மாறாத இசையும்-

அடிவயிற்றில்
ஓலமிடும் பசியும்-

இருளில் குளித்த
தெருக்களும்-

எனத் தன்
வர்ணங்களைத்
தானே
தேர்வுசெய்கிறது
அலுப்பூட்டும்
என் பள்ளிப்பருவத்து
ஓவியம்.

முடிவு பெற்ற
ஓவியத்தில்
இடம்பெறவே இல்லை

பயிலாத கல்வியும்
தொலைந்துபோன
என் பால்யமும்
அம்மாவின் அண்மையும். 

7 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான வரிகள். தொலைந்து போன பால்ய வயது இனி திரும்பி வரப்போவதில்லை. கவிதை எழுதித்தான் களிப்படைய வேண்டும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Good One Ji!

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மனதை பிசைந்து
அப்படியே
ஆக்கிரமித்துக் கொண்ட
கவிதைவரிகள்
இழந்து போன பால்யமும்
இல்லாத
அன்னையின் அருகாமையும்
கண்களில்
கண்ணீரை
வரவழைக்கிறது

G.M Balasubramaniam சொன்னது…

காகிதங்களிலும் கான்வாசிலும் வரையும் ஓவியஙள் முற்றுப் பெறலாம். மனத்திரையில் ஓவியஙகள் அதுவும் பால்ய நினைவுகளும் தாயின் அருகாமையும் நாளேர நாளேர மெருகேறிக்கொண்டே இருக்கும். உங்கள் கற்பனையும் மெருகேறிக்கொண்டே வருகிறது.

மிருணா சொன்னது…

உண்மைக்கு அருகாமைக்குப் போகும் இந்த கவிதையின் மதிப்பு மிக அதிகம்.

நிலாமகள் சொன்னது…

க‌ட‌ந்துபோன‌ கால‌த்தின் வ‌ச‌ந்த‌ப் பொழுதுக‌ளை எண்ணி எண்ணி குதூக‌லிப்ப‌து போலில்லை இலையுதிர் பொழுதான‌ துக்க‌ம் பெருக்கும் நினைவுக‌ள். க‌டைசி வ‌ரிக‌ள் க‌ண்க‌ளை க‌சிவிக்கும்ப‌டி:(

த‌ன‌க்கான‌ வ‌ண்ண‌ங்க‌ளைத் தானே தெரிவுசெய்து கொள்ளும்ப‌டியே அமைகிற‌து வாழ்த‌ல‌ற‌ம்.

Vel Kannan சொன்னது…

மிருணாவை வழிமொழிகிறேன்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...