நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திசைக்கு சற்றே வலதுபுறம் தெரிகிறதா ஒரு பிரம்மாண்டமான கட்டிடம்?
அது ஒரு பெரிய மருத்துவமனை. அதன் ஏழாவது தளத்துக்கு நாம் செல்கிறோம்.
ஒரு அறையில் இரு தீவிரமான வியாதிகளால் பீடித்த நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு சிறு தடுப்புச் சுவர்.
ஒருவரின் படுக்கை அருகே ஒரே ஒரு ஜன்னல். இவரை ஜான் என்று கூப்பிடலாம். மற்றவருக்கு - இவர் ராபர்ட் - அதுவும் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமையே இருவரின் துணை.
புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் ஜான். ராபர்ட்டோ புற்று நோயுடன் கடுமையான பக்கவாத நோயாளி. நாட்கள் தேயத் தேய இருவரும் நண்பர்களாகி விட்டனர். ஒருமுறை ராபர்ட் ஜானிடம் சொன்னார்.
"உனக்காவது வெளி உலகைப் பார்க்க - பொழுது போக்க ஒரு ஜன்னல் இருக்கிறது. என் நிலைமையைப் பார். ஒவ்வொரு நொடியும் நரகம்.”
“நீ சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால். இனி நமக்குள் ஒரு ஒப்பந்தம். நான் என்னவெல்லாம் பார்க்கிறேனோ அதையெல்லாம் காட்சிக்குக் காட்சி உனக்கு விவரிப்பேன். போதுமா நண்பா?”
அன்று முதல் ஜான் தான் பார்க்க நேர்ந்தவற்றையெல்லாம் ராபர்ட்டுக்குப் படு சுவாரஸ்யமாகக் கூறி வந்தார்.
”ஹா! என்ன ஒரு ரம்யமான சூழல்! ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய நிலவின் மது பொழியும் சலனமற்ற ஏரி. நடுவில் சிறு தீவு. ஏரியில் படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா. காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்."
ராபர்ட்டுக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும். அதுவும் ஜானின் மொழியில் தன்னையே மறந்து தன் நோயை மறந்து கேட்டுக்கொண்டிருப்பார் ராபர்ட்.
மற்றொரு நாள் ஆனந்தமான ஒரு காட்சியை ஜான் விவரித்துக் கொண்டிருந்தார்.
"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை. அதில் மணப்பெண் வாசம் நிறைந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்கார்ந்தபடி ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.மணப்பெண் முகத்தில் அடடா! அப்படி ஒரு வெட்கம்.!"
ராபர்ட்டுக்கு ஊர்வல ஆர்ப்பாட்டங்கள் எதுவும் கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை ஜான் மூலம் ஏக்கத்துடன் காதுகளால் நன்கு அனுபவிப்பார்.
ஒரு நாள் நள்ளிரவில் உறக்கத்திலேயே ஜான் மரித்துப் போனார்.
ராபர்ட்டுக்கு ஜானின் இழப்பைத் தாங்க முடியவில்லை ஒருநாளைக்கு மேல்.
மறுநாள் செவிலி வந்தபோது தன்னால் தனிமையின் வெறுமையைத் தாங்க முடியவில்லை. முடியுமானால் ஜன்னல் ஓரமாகவாவது தன் படுக்கையை மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார்.
ஜானின் மறைவை இப்படியாவது சமாளித்துக் கொள்வேன் என்று எண்ணியபடியே தன் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்லத் தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே பார்க்க-
அங்கே ஒரு பெரிய வெள்ளை மதிற்சுவர் தெரிந்தது.
ஜான் இருந்த போது ஜன்னல் வழியே பார்த்து விவரித்த காட்சிகளைப் பற்றிக் குழம்பியபடியே செவிலியிடம் சொன்னார் ராபர்ட்.
செவிலி ராபர்ட்டுக்கு மருந்தைக் கொடுத்தபடியே சொன்னாள்.
"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது ராபர்ட். கடுமையான புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்திருந்தார் ஜான்”
காட்சிகளைக் காணக்
கண்கள் தேவையில்லை.
தொலைவைக் கடக்கக்
கால்கள் தேவையில்லை.
பரிவு காட்டித்
தலைமுடி கோதக்
கைகளும் தேவையில்லை.
பிறரையும் மலர்த்தும்
மகிழம்பூ மனமும்
பிறருக்காய் உதிர்க்க
ஒரு துளிக் கண்ணீரும்
இருந்துவிட்டால்.
16 கருத்துகள்:
இருக்கறதுலயே பெரிய சந்தோசம் மத்தவங்கள சந்தோச படுத்தி பாக்கறதுதான்....
பார்க்க கண்கள் தேவை இல்லை. கற்பனை போதும்.உலாவ கால்கள் தேவை இல்லை, மனோரதம் போதும். பிறர் துயர் துடைக்க அந்த மகிழம்பூ மனம்தான் அரிதாய் வருகிறது சுந்தர்ஜி. படித்த வற்றை அழகாகப் பகிர்ந்து கொள்கிறீர்கள். பாராட்டுக்கள்.
unmayile nala iruku sir
romba alga iruku sir
கண்கள் இல்லாத போதுதான்
அறிவு திறக்கிறது
கால்கள் இல்லாத போதுதான்
கைகள் உதவுகின்றது
காது கேக்காத போதுதான்
குரல் வலிமையடைகிறது
இல்லாத போது தான்
இருப்பது தெரிகின்றது
கதவு மூடியபின்தான்
ஜன்னல்....................
நல்ல கவிதை அண்ணா
நன்றி
I thought it was a fabulous story... At one point- it made me think about something else also... Mind sees what it wants to see... the other day- i was on the verge of making a decision. i stupidly thought- if i see 'red' somewhere- i ll not go with my current decision (but secretly i wanted to go along...). all i saw was 'red'- in signals, buses, women in red saree... quickly- i said to myself-- 'green' to go along with my decision. and i saw 'green' all around!
mind has an 'eye' of its own. the vision it sees- is very personal. not everyone can dare share their vision with another soul! but it can always be trained to see all the good around. and so- one needn't be afraid to share with the other, what one has seen!
the story makes me think of so many other things... really good one, sir-ji!
PS: also- reminded me of an ad. i liked since a while back... the vicks cricket commentary ad film... (http://www.youtube.com/watch?v=N0zMS-MvGt8)
இதுவரை வந்தவற்றில் இது ரொம்ப நல்லா irukku saar
கலங்கடித்துவிட்டீர்கள். அழுகை வந்துவிட்டது பதிவைப் படித்து.
அருமை அருமை
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
என்பது மாதிரி
நல்ல கதையை தேர்ந்தெடுத்தும்
கொடுத்துவிடுகிறீர்கள்
அதை நல்ல கவிதையாக்கி
அழகு படுத்தியும் கொடுத்துவிடுகிறீர்கள்
தங்கள் பதிவைத் தொடர்வது
மகிழ்வூட்டுதாயும்
அறிவூட்டுவதாயும் உள்ளது
தொடர வாழ்துக்கள்
/ பிறருக்காய்
உதிர்க்க ஒரு
துளிக் கண்ணீரும்
பிறரையும்
மலர்த்தும்
மகிழம்பூ மனமும்
இருந்துவிட்டால்./
ஐயா நலமா?
உண்மை தான் இந்த வரிகள்.. மனமே எல்லாம் தானே....
புத்தியில் உறை(க்)கிறது கதை !
ஜி இது ஒரு அற்புதமான கதை. ரொம்ப நாள் முன் எனக்கு மெயிலில் வந்தது. இருந்தாலும் உங்களைப் போன்று சேர வேண்டியவர்களிடம் சேர்ந்தால் அது பெருமையடைகிறது.
மாதங்கி.. அந்த விக்ஸ் விளம்பரம் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ;-))
superb story!!!
தெரிந்த கதை தான். உங்கள் கவிதை அதற்கு இன்னும் வலு சேர்த்து விட்டது.
ஒரு அற்புதமான கதையும் அதை பிரதிபலிக்கும் கவிதையும் என மிக அருமையான பகிர்வு. மனதைத் தொட்டது உங்கள் ஞானக்கதை...
பிறருக்காய்
உதிர்க்க ஒரு
துளிக் கண்ணீரும்
பிறரையும்
மலர்த்தும்
மகிழம்பூ மனமும்
இருந்துவிட்டால்.//
கதைத் தெரிவும், கவிதையாக்கமும் அருமை ஜி!
கருத்துரையிடுக