3.5.10

என்னைப் பற்றிய ஒரு கவிதை-பை ஜுயி


சிகப்புக் கன்னங்கள்.
நரைத்த தாடி.
வைன் குடித்த நான்.
கடைசியில்
வருஷங்கள் எல்லாம்
ஓடிக்கழிந்தபின்
இப்போது எல்லாம்
வெறுமையாகத் தோன்றுகின்றன.
வயோதிகனாக
நோயுற்றவனாக
ஒல்லியாய் இளைத்திருந்தாலும்
கவிதைகளின் மீதான காதல்
இன்னும் மீதமிருக்கிறது.
ப்ரியமான் ஒரு கனவான்
ஒரு கித்தானில்
என் உருவ ஓவியத்தை
வரைந்துவைத்திருக்கிறார்
என்றறிந்த போது
கொஞ்சம் சிரித்தேன்.

7 கருத்துகள்:

பத்மா சொன்னது…

எவ்ளோ சந்தோஷம் அது?

சுந்தர்ஜி சொன்னது…

அதில் வருத்தமும் கொஞ்சூண்டு கலந்திருக்கு.

ஹேமா சொன்னது…

அவரது வாழ்வின் நாட்குறிப்பாக எடுத்துக்கொள்ளலாமா அந்த அவரது ஓவியத்தை !

கவிதைக்கான ஓவியமும் அழகு சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

லாம்.நன்றி ஹேமா.

இரசிகை சொன்னது…

:)

சைக்கிள் சொன்னது…

எனக்கென்னவோ 'கொஞ்சம் சிரித்தேன்' understatement ஆகப் படுகிறது. என்றாலும் 'கொஞ்சம் சிரித்தேனில்' முழு கவிதையும் மலர்ந்து விடுகிறது, இல்லையா?

vasan சொன்னது…

"நான் என் கவிதைகளில் இருக்கிறேன்."
என நீங்க‌ள் சொல்வ‌து போல்,
அவன்,
'ப்ரியமான ஒரு கனவான்
ஒரு கித்தானில்
என் உருவ ஓவியத்தில்'
இருந்து சிடிக்கிறானோ?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...