2.5.10

சாலை



எதையும் கவனிக்காது யார் மேலோ மோதி
விரைகிறது இளமை.
யார் மீதும் மோதாமல் செல்ல
முயல்கிறது நடுத்தரம்.
யாரும் தன்மீது 
மோதிடாமல் பரிதவிக்கிறது
வயோதிகம்.
எதையும் பொருட்படுத்தாமல்
மிகச் சரியாக எல்லோர் மேலும்
மோதுகிறது மரணம்.

4 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

ada!!

பத்மா சொன்னது…

நிஜம் தான் .கொஞ்சம் பயமாவும் இருக்கு

மெல்லினமே மெல்லினமே சொன்னது…

unmaithan suntharji!

சைக்கிள் சொன்னது…

உங்கள் கவிதை என்ற வண்ணத்துப்பூச்சி ஒவ்வொரு பருவத்திலும் நின்று நிதானித்துவிட்டு கடைசியாய் அமர்கிறது அமரத்துவத்தில்.அழகு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...