இப்போது ஒரு நூறில்
பாதியை
அடைந்துவிட்டேன்.
ஆனால்
எனக்கென்று கொஞ்சநேரத்தை
எப்போது நான் பெறுவேன்?
காலையில்
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்
வீட்டைவிட்டுக் கிளம்புகிறேன்.
சாயங்கால மத்தளம் முழங்கும்போது
வீடு திரும்புகிறேன்.
என்னுடைய வைன் ஜாடி காலியாகவோ
அல்ல்து
என் வீட்டுச்சுவரைத் தாண்டி
மலையின் காட்சி தெரியாமலோ இல்லை.
ஆனால்
இவற்றையெல்லாம் ரசிக்க
எனக்கு நேரமில்லை என்பதுதான் விஷயம்.
ஒவ்வொரு நாளும்
மிகுந்த களைப்போடு வீடு திரும்புகையில்
நேரே நான் படுக்கையில் விழுகிறேன்.
எனக்கு மட்டுமே கிட்டக்கூடிய
ஆனந்தம் இனி வருமா?
3 கருத்துகள்:
சுந்தர்ஜி..என்ன இது !தைரியமா எவ்வளவோ எழுதியிருக்கீங்க.
எமக்குண்டான நேரங்களை நாங்கள்தான் திட்டம் போட்டோ தீர்மானித்தோ எடுக்கவேணும்!
பக்கத்தில இணைச்சிருக்கிற பாடல் தெரிவுகள் அனைத்துமே அருமை அருமை."விடைகொடு எங்கள் நாடே..."எந்த நேரத்தில் கேட்டாலும் மனம் இறுகி கண் கலங்காத பொழுதே இல்லை.
நீங்க குழந்தைநிலாவுக்கும் வரணும் சுந்தர்ஜி.http://kuzhanthainila.blogspot.com/
உப்பு மடச் சந்திக்கு நேத்தே வந்துட்டேனே!பாக்கலியோ ஹேமா.
அந்தக் கவிதை பை ஜூயிங்கற ஒரு சீனக்கவிஞன் 1500 வருஷங்களுக்கு முன் எழுதினது.மொழிபெயர்ப்பு என்னுது.
oho....
intha pai jeeyi-ku ippothaan porul puriyuthu:)
1500 varusham.....ammmaadi.
:)
கருத்துரையிடுக