வெகு நாளாயிற்று நிலா பருகியும்
நக்ஷத்திரங்கள் பறித்தும்.
கால முட்களின் கூரால்
கிழிபடுகிறதென் பயணத்தின் வரைபடம்.
நம்பிக்கையின் நங்கூரத்தைத் தாக்குகிறது
அவநம்பிக்கையின் சம்மட்டி.
தத்தளித்துக் குற்றுயிர் பற்றி நிமிர்கையில்
புலரியின் கைகளில் மெல்லப் படர்கிறது
நாளையின் பசுங்கொடி.
அதன் முதல் மலர் எழுதத் துவங்குகிறது
என் அடுத்த கவிதைக்கான முதற் சொல்லை.
16 கருத்துகள்:
காலம் நம்மைப் பிழிவதை யார் தடுக்க முடியும்?சொக்கினேன் சுந்தர்ஜி.
பா.தியாகு.
முதல் சொல்லை எழுதிய மலரின் கையெழுத்து அழகு.(இப்போதான் தெரியுது நிலாவும்,நக்ஷத்திரமும் காணாமப்போற காரணம்)
கலைவாணி.
padam........superb[thalaippum]..!
unga blog - i follow seiyum fecility illaiyo??
follower aaka aasai.
இப்போ நேரம்கிடைச்சிருக்கு.
கவிதை எழுதுங்க.வாசிக்க நாங்க இருக்கோம்.ஆனா மலரையும் நிலவையும் நட்சத்திரங்களையும் அந்தந்த இடத்திலேயே விட்டு வையுங்கோ சுந்தர்ஜி.
சபாஷ் சுந்தர்ஜி.
ரொம்ப பாசிடிவா இருக்கு சுந்தர்ஜி .எண்ணங்களை வார்த்தைகளாக்கி அதனையும் கவிதையாக்கி கிறங்கடிக்கிறீர்கள்
இக்கவிதையில் சொட்டும் தமிழின் இனிய சாற்றை மிடறு மிடறாய்ப் பருகினேன்.
//புலரியின் கைகளில் மெல்லப் படர்கிறது நாளையின் பசுங்கொடி//
என்னவொரு அழகான வார்த்தை நெசவு!அந்த முதல் மலர் எழுதும் முதற்சொல் வாசிக்கும் உள்ளங்களில் பூ வைத்துப் போகிறது.நன்றி.
உஷா
நன்றி-
தியாகு.
கலைவாணி.
ரசிகை.
ஹேமா.
மதுமிதா.
பத்மா.
உஷா.
திரும்ப வந்து படிக்கிறேன் சுந்தர்ஜி ,நட்சத்திரங்கள் பறித்தல்! என்ன ஓர் அழகிய சொல்லாடல் அது
மறு வாசிப்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி பத்மா.
பின் தொடரும் வசதி தற்காலிகமாக இல்லை ரசிகை. கிடைத்தவுடன் தருகிறேன்.
நல்லாயிருக்கு... வார்த்தைகளின் கோர்ப்பு அருமை...
முதல் வருகை.வாருங்கோ அஹமது இர்ஷாத்.நன்றி.
"கால முட்களின் கூரால்
கிழிபடுகிறதென்
பயணத்தின் வரைபடம்."...
arumai arumai.. mikavuk azhagaana varikal... pugaippadamum mika poruththamaaga ullathu!
keep writing!
நன்றி மாதங்கி.ரொம்ப நாளாச்சு நீங்க வந்து.தொடர்ந்து எழுதுவேன்.
அவநம்பிக்கை சம்மட்டி துருவாய் உதிர்ந்து பூக்களை ப்ரசவித்தது.சூப்பர் சுந்தர்ஜி.
-ஜெ.ஃப்ராங்க்ளின் குமார்.
கருத்துரையிடுக