மழையானால் உன் முற்றத்தில்
தமிழானால் உன் கவிதையில்
முத்தமானால் உன் இதழ்களில்
சத்தமானால் உன் வசவுகளில்
நாணமானால் விரல் மூடும் உன் முகத்தில்
நடனமானால் உன் பாதங்களில்
காரிருளானால் உன் கல்லறையில்
கடும்போரானால் அபலையே உன் கண்ணீரில்
காற்றானால் வியர்வை கசியும் உன் உழைப்பில்
ஊற்றானால் தாகமுற்றலையும் உன் மிடறில்
சாவானால் வாழும்வரை உன் நினைவில்
வாழ்வானால் சாகும்வரை உன் மடியில்.
4 கருத்துகள்:
எல்லாமே நீயானால் உன்னில் அத்தனையும் நானாவேன் !
:)
moththaththil kaathal!!
ஆஹா நான் நீயாகும் நிலை பூரணத்துவம் .செமையா இருக்கு ஜி .
எப்படி சிலாகிப்பதென்றே புரிபடவில்லை.. தட தட வென மனசுக்குள் ஓடிய வார்த்தைகள்.. என்ன சுகம்..
கருத்துரையிடுக