11.5.10

ஆருடம்



I
அசைக்கிறது எப்பொழுதும்
முதல் வார்த்தைக்கான பீடிகையும்
எய்கிற முதல் பார்வையின் வசியமும்.

II
நொடியில் நிகழ்கிறது
ஏற்பதற்கும் மறுப்பதற்குமான தீர்மானம்
சூதாட்டத்தில் தோற்றவனின் தயக்கத்துடன்.

III
விரிக்கும் வலை
நிராசைக்கும் பேராசைக்கும் மத்தியில்
விழுகையில் திறக்கிறது
மாயாலோகத்தின் கதவுகள்.

IV
அழைப்போ மறுப்போ
ஒட்டப்பட்ட சிரிப்போடு
கண்ணுக்குத் தெரியாது
வீசப்பட்டபடியே இருக்கிறது
யாருக்காகவோ வலைகள்.

V
கவிழ்ந்தும் நிமிர்ந்தும்
கிடக்கும் சோழிகள்
நினைவுபடுத்துகின்றன
இரவுநேர நடனக்காரியின் ஆடையை.

6 கருத்துகள்:

Madumitha சொன்னது…

உருளும்
சோழிகளின்
சப்தம்
வருங்காலத்தின்
எக்காளமோ?

இரசிகை சொன்னது…

4th and 5th
remba pidichchathu.....

vaazhththukkal sundarji!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
மது.
இரசிகை.

ஹேமா சொன்னது…

//அழைப்போ மறுப்போ
ஒட்டப்பட்ட சிரிப்போடு
கண்ணுக்குத் தெரியாது
வீசப்பட்டபடியே
இருக்கிறது
யாருக்காகவோ வலைகள்.//

ம்ம்ம்....உண்மைதான்.மற்ற எல்லா வரிகளையுமே ரசித்தேன் சுந்தர்ஜி.

பத்மா சொன்னது…

அசைக்கிறது எப்பொழுதும் முதல் வார்த்தைக்கான பீடிகையும்

எய்கிற முதல் பார்வையின் வசியமும்.

உண்மை .அது ரொம்ப யோசிச்சு வருவதனால் இருக்குமோ?

பத்மா சொன்னது…

அழைப்போ மறுப்போஒட்டப்பட்ட சிரிப்போடு கண்ணுக்குத் தெரியாது வீசப்பட்டபடியே இருக்கிறது யாருக்காகவோ வலைகள்.

வலைகளில் சிக்குவது சுகம் தானே .
வார்த்தைகளும் ஒரு தூண்டில் தான் ,அதன் பின் ஒரு மறைக்கப்பட்ட வலை .
ரசிக்கிறேன் சுந்தர்ஜி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...