1.5.10

என் வசிப்பிடம்-பை ஜுயி.


நான் தலைநகரத்தில்
அலைய ஆரம்பித்து
இருபது வருடங்களாகிறது.
இன்னும் ஏழையாக-
இன்னும் வசதியான
வீடில்லாமல்.
எப்போதும்
தன் முதுகிலேயே
தன் வீட்டைச் சுமந்துபோகும்
நத்தையைப் பார்த்து
வியக்கிறேன்.
உண்மையிலேயே
தனக்கென ஒரு வளையை
வைத்துக்கொண்டிருக்கிற
எலியைக் காட்டிலும்
துரதிர்ஷ்டசாலியாக
இருக்கிறேன் நான்.
ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
ஒரு கைப்பாவையைப் போல
எப்போதும் மாற்றப்பட்டு
அலைவதை விட
ஒரு ஊசிமுனையளவு
கிடைத்தாலும் மகிழ்வேன் நான்.
எனக்கெனச் சொந்தமாய்
ஓரிடம். அது
சகதிக்குள்ளோ -
நெருக்கடி மிகுந்தோ-
அழுக்கான இடமோ-
கவலை இல்லை
அது பற்றி.

6 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஏதேனும் ஒரு இடம்.. மனசிலாவது.. அதுவும் இல்லமல் போகும் போது..
எலியைக் காட்டிலும்
துரதிர்ஷ்டசாலியாக
இருக்கிறேன் நான்...
என்ன ஒரு சுளீர்..

Matangi Mawley சொன்னது…

brilliant words.. !

சுந்தர்ஜி சொன்னது…

எல்லாப் புகழும் பை ஜூயிக்கே.1400 வருஷத்துக்கு முன்னாலேயே எத்தனை நவீனமான பார்வை இல்லையா மாதங்கி மௌலீ.முதல் வருகைக்கு ஒரு பூங்கொத்து.

சுந்தர்ஜி சொன்னது…

ந்னறி ரிஷபன். மே ஆரம்பிச்சாச்சா!இனிமே நெறைய எழுதுவீங்க இல்லையா?படிக்கக் காத்திருக்கிறேன்.

பத்மா சொன்னது…

எப்படியாவது சிறு இடம் தானே நாம் தேடி அலைவது .இடம் என்ற இடத்தில் நேசம் ,பாசம் ,காதல், புரிதல், செல்வம் எதைவேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம் .இல்லையா சுந்தர்ஜி

சுந்தர்ஜி சொன்னது…

மிகச் சரி பத்மா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...