I
இன்று உஷ்ணம் 45டிகிரி.
போன ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக
லட்சத்திப் பதினொரு மரங்கள் வெட்டப்பட்டன.
வலது கையால் சாப்பிடுவோரின் ஞாபகத்திறன்
சாப்பிடாதிருப்பவர்களை விட நூறு மடங்கு கூடுதல்.
போன வாரத்தைய ஒரு நாளின் மழையளவு
214மில்லிமீட்டர் அல்லது சென்டிமீட்டர்
சாலை விபத்து 56% அதிகரிப்பு.
மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம்
ஆணை விடப் பெண் 32% அதிகம்.
புகைப்போரை விட காசநோயாளர்கள் 51% வாழ்தல் அதிகம்.
தூக்கில் தொங்கிய ஆண்களை விட அறுபது சதம்
பெண்கள் குள்ளமானவர்கள்.
II
பிழியப்பட்ட பழத்தின் சக்கைக்கும்
கழிவறைக் காகிதங்களுக்கும்
நைந்து போன வாழ்க்கைக்கும்
இடையில் சிரிக்கின்றன
யாருக்கும் உபயோகமில்லாப்
புள்ளி விவரங்கள்.
6 கருத்துகள்:
நம் முதல்வர் அடிக்கடி புள்ளி விவரங்கள் கூறுகிறவர். 'எப்படிச் சரிபார்க்கிறது!'என்று வியக்கும் என் காதுகள். எதிர்க்கட்சித் தலைவரும், நான் ஆட்சியில் இருந்த போது... என்று - பிழியப்பட்ட பழத்தின் சக்கை...
//வலதுகையால் சாப்பிடுவோரின் ஞாபகத்திறன் சாப்பிடாதிருப்பவர்களை விட நூறு மடங்கு கூடுதல்.//
சாப்பிடாது இருப்பவர்களை விடவா, அல்லது வலதுகையால் சாப்பிடாது இருப்பவர்களை விடவா? விடுங்கள், எப்படி இருந்தால் என்ன, கழிவுகளுக்கு இடையில் சிரிக்கும் விவரங்கள்.
அண்ணன் இங்க வந்தாச்சா?
very good! :-)
அருமை சுந்தர்ஜி!
புள்ளி விபரங்களின் தரவுகள் சரிதானா சுந்தர்ஜி.தெரியாத தரவுகள்.நன்றி.
கழிவுகளில் பழச்சக்கை உரமாகிறதே.
நைந்த வாழ்க்கை அடுத்தவர்களின் பாடம்.உபயோகமாகிறதே !
ஆம் சுந்தர்ஜி ..ஆனால் இந்த தேவையில்லா புள்ளி விபரங்கள் தான் நம் ias அதிகாரிகளைக்கூட உருவாக்குகின்றன .
பெரிய பெரிய ஆட்களெல்லாம் உங்கள் பின்னூட்டத்தில் .
வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து பலரையும் சென்றடைகிறது சிறப்பு. மகிழ்ச்சி
சுந்தர்ஜி...
புள்ளிவிவரங்களின் பயன்குறித்த கவிதை அருமையான வடிவமும் பொருண்மையும் கொண்ட கவிதை. பாராட்டுக்கள்.
நன்றி ஹரணி.
கருத்துரையிடுக