8.5.10

கண்ணாமூச்சி




I
விதிக்கப்பட்டிருக்கிறது
பகலில் துயருறவும்
இரவில் ஆறுதலுறவும்.

II
தோன்றுகிறது
கண்ணனைப் போல 
இரவு.
ராமனைப் போலப்
பகல் என்று.

III

புதிர்களின் முடிச்சாய்ப்
பாய்கிறது 
இருளின் நதி.
கைகளில் அள்ளிய நீராய்
ஒழுகி மறைகிறது
ஒளியின் சுனை.

IV
பகலின் சிறகு
பறந்து களைக்கிறது.
இரவின் சிறகோ
உறங்கித் திளைக்கிறது.

V
ஒளியின் தூரிகை
பூசும் நம்பிக்கையை
ஒவ்வொன்றாய்க்
கலைக்கிறது
இருளின் 

பைசாசக் கைகள்.

VII

மூடியதையெல்லாம்
திறக்கிறது 
ஒளி.
திறந்திருப்பதையெல்லாம்
மூடுகிறது 
இருள்.

VIII

பொறுப்புக்களை
நினைவுறுத்துகிறது 
ஒளி.
அனைத்தையும் மறக்கும்
மதுவைத் திகட்டாது
புகட்டுகிறது 
இருள்.

IX

இருளுக்குள்
ஒளிகிறது பகல்.
ஒளிக்குள்
கரைகிறது இருள்.

X

பகலின் துயர்களைக்
கனவுகளால் மூடுகிறது 
இருள்.
இருள் தந்த கனவுகளைச்
சல்லடையாக்குகிறது 
ஒளி.

XI

அறியாமலே
விடைபெறுகிறது
இருள்.
விடைபெறாது 

நீள்கிறது
பகல்.

XII
சில நாட்களாய்.
ஒத்திகை நிகழ்த்துகிறது
ஒவ்வொரு புலரியும்
வாழ்க்கை குறித்து-
ஒவ்வொரு நிசியும்
மரணம் குறித்து-

XIII
பகலைக் கம்பளத்தால்
போர்த்துகிறது இருள்.
இருளின் ஆடைகளை
இரக்கமின்றி உரித்து
நிர்வாணமாக்குகிறது புலரி.

13 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

yellaame remba remba azhakaayirukku sundarji:)

சுந்தர்ஜி சொன்னது…

ஓ இங்கதான் இருக்கீங்களா?நன்றி ரசிகை.

பத்மா சொன்னது…

தோன்றுகிறது
கண்ணனைப் போல
இரவு.
ராமனைப் போலப்
பகலென்று.

இத கொஞ்சம் வில்லதனம்ன்னு சொல்லவா ;)

பத்மா சொன்னது…

மூடியதையெல்லாம்
திறக்கிறது ஒளி.
திறந்திருப்பதையெல்லாம்
மூடுகிறது இருள்.

இது கிளாஸ்
சரசரவென்று கண்ணில் விரியுது காட்சிகள்

பத்மா சொன்னது…

படமும் கொள்ளை அழகு

Madumitha சொன்னது…

பகலின்
நிழல் தான்
இரவோ?

ஹேமா சொன்னது…

பகலையும் இரவையும் பிரித்துப் பார்த்த சுந்தர்ஜி வாழ்க.

//தோன்றுகிறது
கண்ணனைப் போல
இரவு.
ராமனைப் போலப்
பகலென்று.//

வரிகளை அவர்களின் உடல் நிறங்களுக்கு ஒப்பிட்டீர்களோன்னு யோசிச்சேன்.வெளிப்படைக்கும் இரகசியத்துக்கும்ன்னு புரிஞ்சுகிட்டேன்.

பத்மா சொன்னது…

கொஞ்சம் கலாட்டா செஞ்சேன் சுந்தர்ஜி .வேறொன்னுமில்லை

சுந்தர்ஜி சொன்னது…

நச் மதுமிதா.

சுந்தர்ஜி சொன்னது…

இரவு பகல் பிரிவு பட விரும்பும் ஹேமாவுக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

சொல்ல மறந்துட்டேன் ஹேமா.தோலின் நிறம் என் கண்களை அடைவதில்லை.நபர்களின் அடையாளத்துக்குக் கூட நான் நிறத்தை உபயோகிப்பதில்லை.

ஹேமா சொன்னது…

இரவும் பகலும் பிரியவேணாம் சுந்தர்ஜி.அவங்க அப்பிடி இருந்தால்தான்
நாங்க இப்பிடி நிறைய எழுதலாம்.

சுந்தர்ஜி நான் கருப்பு தெரியுமோ !அதான் சின்னதா ஒரு குறுகுறுப்பு !

சுந்தர்ஜி சொன்னது…

சரி ஹேமா.நீங்க சொல்றபடியே இருக்கட்டும்.பிரிய வேணாம்.
நிறத்தை மறங்க தோழி.மனதின் நிறம் போதுமே.இல்லியா?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...