ஒரு முழு நாளும்
என் வீட்டு வழிநடையில்
இருட்டும் வரையில்
காத்து நின்றிருந்தேன்;
பின் இரவு முழுவதும்
என்னறையில்
விடியும்வரை
உட்கார்ந்திருந்தேன்;
நான் எதுவும் சொல்லாமல்
இதற்கான காரணத்தை
நீ அறிய முடியாது.
இவை அனைத்தையும்
கவனித்திருந்தால்
நீ கேட்டிருக்கக்கூடும்
இரண்டு அல்லது மூன்று
பெருமூச்சுக்களை.
4 கருத்துகள்:
அந்த பெருமூச்சுகள் எல்லவற்றையும் சொல்லி விடும்.. கேட்டிருந்தால்..
சுடும் மூச்சு
நன்றி
ரிஷபன்.
பத்மா.
moochchum pesum.....:)
கருத்துரையிடுக