5.5.10

ஒரு இலையுதிர்கால நாளில் வீட்டில்-பை ஜுயி


மாடியின் அருகே
நிறைய மூங்கில்களும்
பைன் மரங்களும்
இருந்த போது
சில விருந்தாளிகள்
என் வீட்டுக்கு வந்தார்கள்.
மேற்குச் சுவரின் நிழலில்
தயக்கமாய் இலையுதிர்காலம்
நிறம் காட்டியது.
ஒரு சிறு காற்று
கிழக்கு அறை வழியே வீசியது.
என்னிடம்
ஒரு புல்லாங்குழல் இருந்தபோதும்
அதை இசைக்காத முழுச் சோம்பேறி நான்.
என்னிடம் பல புத்ததகங்கள்
இருந்தபோதும் அவையெல்லாம்
வாசிக்காது விடப்பட்டன.
ஒவ்வொரு நாளும்
எனக்கென்ற விருப்பங்களோ
கவலைகளோ ஏதுமின்றி
நான் வாழ்ந்தேன்.
வசிப்பதற்கு
இவ்வளவு பெரிய வீடு
யாருக்கு வேண்டும்?
தானியங்களைச் சேமிப்பது
பலனற்றதல்லவா?
வசிக்க ஒரு அறை
எனக்குப் போதும்.
ஓரளவு அரிசி என்னைப்
பலநாட்கள் காக்கும்.
இன்னும் கூட மாளிகையிலிருந்து
சம்பளம் பெற்று வந்தாலும்
எங்கள் மண்ணை உழுது சரிசெய்ய
தெரியாதிருக்கிறேன்.
நான் ஒரு மல்பெரியைக்கூட
பயிரிட்டதில்லை.
அல்லது ஒரு துண்டு நிலத்தில்
கூட உழைத்ததில்லை.
இருந்தும் தினமும்
என்னால் ஏற்கும் அளவு
சாப்பிடுகிறேன்.
வருடம் தோறும் விரும்புகிற
எல்லா ஆடைகளையும் அணிகிறேன்.
நான் இது பற்றி
ஆழமாக யோசிக்கும்போது
எனக்கு வெட்கமாக இருக்கிறது.
இருந்தாலும் அந்த வெட்கம்
எளிதில் த்ருப்தியாக
மாறிவிடுகிறது.

6 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

அழகான வார்த்தை கோர்வை

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி இந்தக் கவிதை நிறையவே சொல்கிறது.

எதையும் இழந்த பிறகுதான் ஏன் இழந்தோமென அதற்கான காரணத்தைத் தேடும் மனம்.

வாழ்வை ரசனையில்லாமலேயே விடிகிறது சாப்பிடுகிறோம் பொழுது இருள தூங்குகிறோம் எனச் சிலரது வாழ்வு.

தேடுதல் இல்லாமை என நீள்கிறது சிந்தனை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்று சொன்னீர்கள் ஹேமா.ஒரு நன்றியப் பிடிச்சுக்கொள்ளுங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

அதிகாலையில் தூங்கமாட்டீங்களோ அப்பாவி(?) தங்கமணி.எப்டீனாலும் என் மொழிபெயர்ப்பை வாசிச்சு ஒரு இடுகைக்கு என் மூன்றெழுத்து வார்த்தை.

பத்மா சொன்னது…

இந்த கவிதை என்னை பற்றியது போல ன்னு தோணுது .வாசிக்கும் அனைவர்க்கும் அப்படிதோணச் செய்வது தான் கவிதையின் வெற்றியோ?

சுந்தர்ஜி சொன்னது…

அப்படித்தான் பத்மா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...