21.5.10

களவு

கிழிபடாத நாட்காட்டியில் 
மயக்கமாய்க் கட்டுண்டு கிடக்கிறது 
ஓர் அதிகாலை.

பூட்டப்பட்ட வீடுகளையும்
அரவம் மிக்க வீடுகளையும்
பற்றித் திட்டமிடுகையில்
நாய்களின் மோப்பம் குறித்தும்
தப்பும் வழி குறித்தும் 
திட்டமிட வேண்டியதிருக்கிறது.

ஏதோ ஒரு திறவுகோலுக்கும் 
ஏதோ ஒரு சைகைக்கும்
ஒத்துழைக்கும் 
ஒலிகளால் அலுத்த வீடு-
பசித்த பிள்ளை மார் புசிப்பதுபோல்
திகட்டாமல் பருகுகிறது 
கள்வர்களின் நிசப்தத்தை.

நதியின் அடியில் 
உருளும் கற்களும் 
தோற்கிறது
கள்வர்களின் பாதங்களிடம்.

முழுமையாய் ஒரு களவு
உதிர்ந்த பின் பூக்கிறது 
புதிதாய் ஓர் அதிகாலை.

21 கருத்துகள்:

பத்மா சொன்னது…

களவு உதிர்தல் ..என்னே ஒரு அழகிய பிரயோகம் !!!!

Kannan சொன்னது…

< நதியின் அடியில் உருளும்
கற்களையும் மிஞ்சுகிறது
கள்வர்களின் இயக்கம். >

< பசித்த பிள்ளை
மார் புசிப்பதுபோல்
திகட்டாமல் பருகுகிறது
கள்வர்களின் நிசப்தத்தை >

< முழுமையாய் ஒரு களவு
உதிர்ந்த பின் பூக்கிறது
புதிதாய் ஒரு அதிகாலை >

யூகிக்க முடியா ஒப்பீடுகள்....!! Im lost myself

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பத்மா.

நன்றி கண்ணன் முதல் வருகைக்கு. உங்களை இழக்கும் போதுதான் நான் மறுபடி எழுதத் துவங்குகிறேன்.

Anonymous சொன்னது…

களவு கொள்ளையடித்தது என் மனதை.பூனைப்பாதம் வைத்து நடக்கும் உத்தி கள்வர்களுக்குக் கைவந்த கலைதான்.நதியினடியில் உருளும் கற்களைச் சொன்னது புதுமை!அருமை சுந்தர்ஜி ஸார்!
-ப.தியாகு.

Anonymous சொன்னது…

களவு மனதைக் களவாடியது.
-ஸ்ரீமதி.

பா.ராஜாராம் சொன்னது…

ரசிகை உங்கள் தளத்தை அறிமுகம் செய்தார்கள்.

யே யப்பா...

எப்படி மிஸ் செய்தேன்?

நன்றி ரசிகை!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பா.ரா.அடிக்கடி வாருங்கள்.உங்களையும் இப்பத்தான் படிக்கத் துவங்குகிறேன்.ரசிகைக்கு நன்றி உங்கள் மூலமும்.

Anonymous சொன்னது…

களவு உதிர்ந்த அந்தக் கிளையில் மலர்ந்திருக்கும் அதிகாலையின் மேல் அமர்ந்து அழகைப்பருகி மயங்கிக் கிடக்கிறது என் விழிகள்.
கலைவாணி.

Anonymous சொன்னது…

நாய்களின் மோப்பம் தாண்டி-சோதனைகள் கடந்து-படபடப்பு-பரபரப்புடன் அடைய நினைத்த இலக்கைப் பற்றுவதில் கிடைக்கும் பேரின்பம் தேர்ந்த கள்வருக்கு இன்பம்.களவாடத் தூண்டும் கவிதை!
தனலக்ஷ்மி பாஸ்கரன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி-
கலைவாணி.
தனலக்ஷ்மி பாஸ்கரன்.
சில சுவையான விமர்சனங்கள் படிக்கும் போது இன்னொரு கவிதை பிறக்கிறது.

Madumitha சொன்னது…

களவும் கற்று எழுது.
இது ரொம்ப புதுசு.

பா.ராஜாராம் சொன்னது…

நன்றி சுந்தர்ஜி! நேற்றிரவு முழுக்க உங்கள் தளத்தில்தான் இருந்தேன். இப்பவும் அங்கிருந்துதான் வருகிறேன். இந்த ரசிகையையும், பத்மாவையும் என்ன செய்யலாம் என வருது. ரேஸ்கல்ஸ்! :-) எவ்வளவு லேட்?

மொத்த பதிவுகளையும் வாசித்தேன்.

உண்மையில் ஒண்ணுமே இல்லை நான் சுந்தர்ஜி.

இவ்வளவு அங்கீகாரம் கிடைத்ததை முதன் முறையாக கில்டி-யாய் feel பண்றேன்.

any hw , மீண்டும் நன்றி ரசிகை! பத்மா உங்களுடன் டூ. :-(

ஹேமா சொன்னது…

ஒரு அதிகாலைக் களவுக்கு என்ன வர்ணனை.அசத்துறீங்க சுந்தர்ஜி.
பாசி படர்ந்த கல்லும் சொல் கேட்கிறதா கள்வர்களிடம் !

உங்கள் டெம்ப்லேட் பெண் எப்போதும் மாறிக்கொண்டிருக்கிறாள்.அழகுதான் !

சுந்தர்ஜி சொன்னது…

பா.ரா. உங்களின் பணிவு என்னைக் கண் கலங்க வைத்தது.உங்களிடம் நான் காணும் எளிமையும்-அன்பும்-விலைமதிப்பில்லாதவை .கவிதையோ-கதையோ யார் வேண்டுமானாலும் எழுத முடியும். வாழ்க்கையை விடப் பெரிய இலக்கியம் என்ன இருக்கமுடியும்? குணமெனும் குன்றேறி நிற்றல் உங்களையன்றி யாருக்கு வரும்? நெகிழ்கிறேன் பா.ரா. நம் உறவுக்குக் காரணமான ரசிகைக்கு மறுபடி ஒரு மூன்றெழுத்து வார்த்தை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மதுமிதா.
நன்றி ஹேமா. மாறுதல் இல்லையேல் எதுவுமில்லை.அப்படித்தானே?

இரசிகை சொன்னது…

//
பா.ராஜாராம் கூறியது...
நன்றி சுந்தர்ஜி! நேற்றிரவு முழுக்க உங்கள் தளத்தில்தான் இருந்தேன். இப்பவும் அங்கிருந்துதான் வருகிறேன். இந்த ரசிகையையும், பத்மாவையும் என்ன செய்யலாம் என வருது. ரேஸ்கல்ஸ்! :-) எவ்வளவு லேட்?

மொத்த பதிவுகளையும் வாசித்தேன்.

உண்மையில் ஒண்ணுமே இல்லை நான் சுந்தர்ஜி.

இவ்வளவு அங்கீகாரம் கிடைத்ததை முதன் முறையாக கில்டி-யாய் feel பண்றேன்.

any hw , மீண்டும் நன்றி ரசிகை! பத்மா உங்களுடன் டூ. :-(
//

:))

//
சுந்தர்ஜி கூறியது...
பா.ரா. உங்களின் பணிவு என்னைக் கண் கலங்க வைத்தது.உங்களிடம் நான் காணும் எளிமையும்-அன்பும்-விலைமதிப்பில்லாதவை .கவிதையோ-கதையோ யார் வேண்டுமானாலும் எழுத முடியும். வாழ்க்கையை விடப் பெரிய இலக்கியம் என்ன இருக்கமுடியும்? குணமெனும் குன்றேறி நிற்றல் உங்களையன்றி யாருக்கு வரும்? நெகிழ்கிறேன் பா.ரா.
//

naan vazhimozhikiren....:)

பத்மா சொன்னது…

ஆக இப்போ எல்லாரும் பிரண்ட்ஸ் ok yaa

rajasundararajan சொன்னது…

//கிழிபடாத நாட்காட்டியில் மயக்கமாய்க்கட்டுண்டு கிடக்கிறது அதிகாலை.//

இது எனக்குப் பிடித்திருக்கிறது.

//ஏதோ ஒரு சாவிக்கும்ஏதோ ஒரு சைகைக்கும்ஒத்துழைக்கும் ஒலிகளால் அலுத்த வீடு//

இதுவும்.

களவு, கள்வர்கள் குறித்து சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலில் நுணுக்கமான/ விரிவான தகவல்/ நிகழ்வுகளை வாசித்து இருக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

எப்போவும்தான் பத்மா. நன்றி.

நன்றி ராஜசுந்தரராஜன்.

Anonymous சொன்னது…

//பசித்த பிள்ளை
மார் புசிப்பதுபோல்
திகட்டாமல் பருகுகிறது
கள்வர்களின் நிசப்தத்தை.//

அசத்தல் சுந்தர்ஜி.

-ஜெ.ஃப்ராங்க்ளின் குமார்.

Anonymous சொன்னது…

களவு கவிதை படித்துத் திகைத்துப் போனேன்.இப்படி ஒரு பார்வையில் கள்வர்களின் உலகை அணுகமுடியுமா?

அடுத்தவீடு பசித்த பிள்ளை உவமை ஒன்று போதும் களவின் அருகே சென்று பேச.

//நதியின் அடியில் உருளும்கற்களும் தோற்கிறதுகள்வர்களின் பாதங்களிடம்.//

கவியழகு சொட்டும் வரிகள் மிதக்கும் இக்கவிதை கனிவின் பாத்திரமெனவே தோற்றம் தரும் அற்புதத்தை நிகழ்த்துகிறது.

உஷாராணி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...