4.5.10

என் எழுத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கிய பெட்டி குறித்து-பை ஜுயி


சைப்ரஸ் மரத்தால்
நீண்ட நாட்களுக்குப்
பாதுகாப்பான வகையில்
ஒரு பெட்டி செய்தேன்.
எதற்காக?
அதில் பை-லெட்டியன்
என என் பெயர்
குறிக்கப்பட்டிருந்தது.
என் வாழ்நாள் முழுதும்
ஒரு எழுத்தாளனாகவே
இருந்துவிட்டேன்.
என் மூவாயிரம் கவிதைகளையும்
உரைநடையையும்
எழுபது பாகங்களாக
நான் சேகரித்துவைத்தேன்;
கடைசியில் அவை
அழிந்தும் தொலைந்தும்
போய்விடும் என்றெனக்குத் தெரியும்.
இருந்தும் அவை
வீசி எறியப்படக் கூடாது என்றே
விரும்பினேன்.
ஆக அவைகளைப் பூட்டி
என் கவனத்திலேயே வைத்திருப்பேன்.
எனக்கு மகன்களோ அல்லது
என் எழுத்துக்களின் மீது
கவனம் கொண்டவர்களோ இல்லை.
என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
அவற்றை என் மகளிடம் கொடுத்து
என் பேரனிடம் ஒப்படைக்கச் செய்வதுதான்.

4 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

nallaayirukku sundarji....!

ungalinanaiththupinnoottangalaiyum kidaikkap petren.nantriyum anbum.

Madumitha சொன்னது…

ஆக எழுத்தாளனின் நிலை
எல்லா ஊரிலும்
ஒரே மாதிரிதானா?

ஹேமா சொன்னது…

ம்ம்ம்...எம் முன்னோர்கள் தரும் செல்வம் இவைகள்தானே.தேவையும் கூட.என் தாத்தா நட்டு வைத்த தென்னை மரத்தில் நாங்கள் இன்று தேங்காய் பறித்துச் சாப்பிடுகிறோம்.
சந்தோசம்தானே சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி-
இரசிகை.
அப்படித்தான் மதுமிதா.
சந்தோஷம் ஹேமா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...